மேலும்

சிறிலங்காவில் நடப்பதை ஜோன் கெரியும், கமரூனுமே தீர்மானிக்கின்றனர் – கெஹலிய ரம்புக்வெல

keheliya rambukwellaசிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“நாட்டில் தற்போது இடம்பெறும் சில நிகழ்வுகள் திருப்தியளிப்பதாக இல்லை.

குறிப்பாக வடக்கில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கவில்லை.

ஆனால் ஒரு விடயம் நன்றாக புரிகின்றது.  அதாவது சிறிலங்காவில் இன்று என்ன நடக்கவேண்டும் என்பதனை பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *