மோடியுடன் தொலைபேசியில் பேச்சு – விளக்கமளித்தார் மைத்திரி
சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து- நேற்றுமாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு, பேசியுள்ளார்.



