விகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு
மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச்சீட்டுகளை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகள் எதிர்வரும் 11 ஆம் நாள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இரண்டாவது கட்டமாக 1553 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக- சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் நிர்ணயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.