மகிந்த – மைத்திரி அணிகளை இணைக்கும் பேச்சு தோல்வி
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக மகிந்த அணியினருடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்று நடத்திய பேச்சுக்களும் தோல்வியில் முடிந்துள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரியும், குறித்த மனுக்களை வரும் 30ஆம் நாள் விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சட்டமா அதிபர் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போடும் சூழல் எழுந்துள்ளமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
நுவரெலிய மாவட்டத்தில் நான்கு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. அம்பேகமுவ மற்றும் நுவரெலிய பிரதேசசபைகளைப் பிரித்து, புதிதாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ளன.
எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று சிறிலங்காவின் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.
அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.