மகிந்த அரசின் தவறுகளே வீழ்ச்சிக்குக் காரணம் – ஒப்புக்கொள்கிறார் கோத்தா
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவில் நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கு, தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழ புதிய அரசியலமைப்பு ஒன்றே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது.
மீரிஹானவில் வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் சிவிலுடையில் சென்று கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிறிலங்காப் படையினர் மூவரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் உடையில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்றில் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்காராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனக் கடிதத்தை வழங்கினார்.
தாம் சிறிலங்கா வந்திருப்பது, தேர்தலைக் கண்காணிக்கவே தவிர, ஜனநாயகம் பற்றி போதிப்பதற்காக அல்ல என்று நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கேத்தாராம மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில், பார்வையாளர்களுக்கிடையில் மோதல் நடந்த போது, அந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.