மேலும்

கட்டுநாயக்க தாக்குதலில் கோட்டை விட்டவரே கேத்தாராமவிலும் கோட்டை விட்டார்

??????????????கொழும்பில் கேத்தாராம மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில், பார்வையாளர்களுக்கிடையில் மோதல் நடந்த போது, அந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா துடுப்பாட்டச் சபையினால் இந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக, அஜித் ஜெயசேகர என்ற முன்னாள் சிறிலங்கா விமானப்படை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் 2001ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய போது, அந்த தளத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்.

நேற்று முன்தினம் இரவு பிரேமதாச மைதானத்தில் துடுப்பாட்டப் போட்டி நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்களின் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.

அதில் பலர் காயமடைந்ததுடன், 12 வாகனங்களும் சேதமடைந்தன.

colombo-odi-clash (2)??????????????

சிறப்பு அதிரடிப்படை, இராணுவம் என்பன அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், கண்காணிப்பு காணொளிப் பதிவுக் கருவியின் ஆதாரங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்கள் நடந்த போது மைதானத்தின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அஜித் ஜெயசேகர வீட்டில் மதுபோதையில் இருந்துள்ளார்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மது அருந்தி விட்டு அவர் வீடு சென்றிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு பெருமளவு ஊதியத்தை சிறிலங்கா துடுப்பாட்டச்சபை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *