அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப் பதவி விலகல்
போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதால், போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்போர் சிறிலங்காவின் வடக்குப் பகுதிக்குப் பயணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நீக்கியிருக்கிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரபூர்வ செயலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றியுள்ளதுடன் இன்று அங்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார்.
சீனாவுடனான உறவுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.