‘யாரும் என்னைக் கைது செய்ய முடியாது’ – என்கிறார் கருணா
தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் பரப்புரைக்காக சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரங்களை ஒளிபரப்பிய கட்டணத்தைச் செலுத்த தவறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று நிதிமோசடிகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழுவினால் விசாரிக்கப்படவுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக அழுத்தங்கள் வலுப்பெற்றதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, போர்க்குற்ற விவகாரத்தை கூட்டமைப்பு அனைத்துலக மயபப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
‘நன்றாக படம் எடுத்து ரீ.என்.ஏ. காரர்களிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) காட்டுங்கள், சந்தோசப்படுவார்கள்’ என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும், சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்கு, ஜெனிவா தீர்மானம் காலஅவகாசத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சிறிலங்கா மற்றும் சீன இராணுவங்களுக்கிடையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், நல்லெண்ணப் பயணமாகவே சீன உயர்மட்டக்குழு சிறிலங்கா வந்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க, நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.