மேலும்

மாதம்: May 2026

பலாலி காணிகள் விடுவிப்பு குறித்த தீர்மானமின்றி திரும்பினார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று, யாழ்ப்பாணம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள,  விடுவிக்கப்படாத பிரதேசங்களில் கள ஆய்வு ஒன்றை  மேற்கொண்டுள்ளார்.

வடக்கில் சிறிலங்கா காவல்துறையை வலுப்படுத்த 134  வாகனங்களை வழங்கியது இந்தியா

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, இந்தியா 134  கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது.

மாகாண சபை தேர்தலுக்கு நிதி பிரச்சினையல்ல- என்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி தொடர்பாக எந்த பிரச்சினைகளும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சிறிலங்காவில் பேச்சு

அமெரிக்க இராணுவத்தின்  பசிபிக் பிராந்தியத்திற்கான, மூலோபாய மற்றும் திட்டங்களுக்கான பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் கில்ஸ் ஜே.எஸ். கொர்னேலியா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர்,  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்தக் கோரும் பிரேரணை

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களின்  சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கோரும், பிரேரணை ஒன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல- என்கிறது கத்தோலிக்க திருச்சபை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும்,  கண்டனம் தெரிவித்துள்ளன.

மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக,  மகிந்த சமரசிங்க, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை- ரில்வின் சில்வா

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை என, ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தடைகளால் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக சவேந்திர சில்வா புலம்பல்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக சிறிலங்காவின்  முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா,நியூசிலாந்துக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.