மேலும்

வடக்கில் சிறிலங்கா காவல்துறையை வலுப்படுத்த 134  வாகனங்களை வழங்கியது இந்தியா

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, இந்தியா 134  கப் வாகனங்களை கொடையாக வழங்கியுள்ளது.

இந்திய- சிறிலங்கா நட்புறவுத் திட்டத்தின் கீழ்,  இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா  பெறுமதியான இந்த வாகனங்கள் கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவிடம் இந்த வாகனங்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவினால் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இந்த வாகனங்கள், வடக்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையங்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் சிறிலங்காவுக்கு இதேபோன்ற உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *