மேலும்

நாள்: 3rd May 2026

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு- சிறப்பு நிரந்தர நீதிமன்றம் நியமனம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, சிறிலங்கா பிரதம நீதியரசர், சிறப்பு நிரந்தர ட்ரயல்  அட் பார்  அமர்வை நியமித்துள்ளார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேக நபராக பெயரிட உத்தரவு

கொழும்பு மற்றும் அயல் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உடன்பாடு- இந்த மாதம் இறுதியாகும்

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை இந்தியாவினால் நியமிக்கப்பட்ட  அமைப்பு மூலம் நிர்வகிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவைத் தயாரிக்கும் பணி இந்த மாதம் நிறைவடையும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

திறைசேரி நிதி மோசடி- அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டது

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது குறித்த  விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், சிறிலங்கா புலனாய்வாளர்கள் அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.