நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முடக்கநிலையை அறிவிக்குமா?
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் முடக்க நிலையை ஏற்படுத்துவற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களால் எழும் எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகளாவிய ரீதியாக எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்துள்ள போதும், சிறிலங்காவில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விடக் குறைவாகவே இருப்பதாக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சிறிலங்கா நடுநிலை மற்றும் அணிசேரா கொள்கைளை பின்பற்றி வருவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஈரானிய போர்க்கப்பலான ஐஅர்ஐஎஸ் புஷேர் மற்றும் அதன் குழுவினர் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த முடிவுகளை எடுப்பதில், சிறிலங்காவின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.