மேலும்

சிறிலங்காவுக்கு அமெரிக்கா முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவிற்கு எந்த முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை.

இராணுவ மோதலில் ஈடுபடும் இரண்டு நாடுகளில் ஒன்று மற்றொன்றுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னர், மூன்றாவது நாட்டிற்கு அறிவிக்கும்  என்று நான் நினைக்கவில்லை.

அத்தகைய அறிவிப்பு எதுவும் சிறிலங்காவிற்கு வழங்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து சிறிலங்கா கடற்படைக்கு ஆரம்பத்தில் எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

இருப்பினும், கடல் பகுதியில் பல உடல்கள் மற்றும் உயிர்காப்பு மிதவைகள் மிதப்பதாக தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, நாட்டின் கடல்சார் அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

சிறிலங்காவின் கடல்சார் ஒருங்கிணைப்பு மையத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப எச்சரிக்கையின் சரியான மூலத்தை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *