ஈரானிய மாலுமிகளின் சடலங்கள் விரைவில் திருப்பி அனுப்பப்படும்
சிறிலங்கா அருகே ஐஆர்ஐஎஸ் டேனா என்ற கடற்படைக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில், கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட 104 பேரில், 84 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை விரைவில் ஈரானுக்கு மாற்றப்படும் என்றும் ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடாக, சடலங்களை திருப்பி அனுப்பும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
