பயணங்களையும், எரிபொருள் கொள்வனவையும் குறைக்குமாறு வேண்டுகோள்
மத்திய கிழக்கு மோதல்களால் எழும் எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது. உலகளாவிய நிலைமைகள் சீராகும் வரை கமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இது ஒரு சாதாரண சூழ்நிலை அல்ல; இது மிகவும் மோசமான நிலை.
பயணத்தை மட்டுப்படுத்துவதன் மூலமும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை வாங்குவதன் மூலமும், குறைந்தளவிலான எரிபொருள் நுகர்வைப் பராமரிப்பதன் மூலமும் நெருக்கடியை சமாளிக்க பொதுமக்கள் கூட்டாக உதவ வேண்டும்.
நாடு முழுவதும் பீதியினால் ஏற்பட்ட அதிகளவு கொள்வனவே, எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்புக்குக் காரணம்.
இதுபோன்ற அதிக கொள்வனவு நடக்கவில்லை என்றால், இந்த மாத இறுதி வரை அதிகாரிகள் முந்தைய எரிபொருள் விலையை குறைந்தபட்சம் பராமரிக்க முடிந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
