மேலும்

மாதம்: October 2026

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை – வெளிநாடு செல்லவும் தடை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

டீசலுக்கு மானியம் வழங்கியும் நட்டம்- என்கிறது பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்த நிலையில், டீசலுக்கு ஒரு லீற்றருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்பட்ட நிலையிலும்,  தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

பயங்கரவாத குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலமே கையாளப்பட வேண்டும்

1979ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்,  பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான், சிறிலங்கா இடையே மூலோபாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு

பாகிஸ்தானுடன் சிறிலங்கா மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது.

ரில்வின் சில்வாவுடன் ஜெய்சங்கர், நிதின் நபின் சந்திப்பு

இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய கோட்டாவின் ரிட் மனு தள்ளுபடி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதையும், தடுத்து வைப்பதையும் தடுக்கும்படி கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க தளபதி பேச்சு

அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “ஜேபி” வோவல், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  ஆகியோரை ​​தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ரஷ்யா- சிறிலங்கா இராணுவ கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா இராணுவத்தின் 20 அதிகாரிகள் மற்றும் 55 படையினரைக் கொண்ட குழுவினர், ரஷ்யப் படையினருடனான கூட்டுப் பயற்சியை நிறைவு செய்துள்ளனர்.

சீனாவுடன் இணைந்து சிறிலங்கா காவல்துறைக்கு புதிய சீருடை

சிறிலங்கா காவல்துறைக்கான புதிய சீருடையை அறிமுகப்படுத்துவது குறித்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு  ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

2027 முதல் காலாண்டு வரை பணவீக்கம் 8 வீதமாகவே நீடிக்கும்

சிறிலங்காவின் பணவீக்கம் இந்த ஆண்டின் எஞ்சிய பகுதியிலும் 2027-ஆம் ஆண்டின் முதற் காலாண்டு வரை, 8 சதவீதம் வரையிலேயே நீடிக்கும் என சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.