மேலும்

மாதம்: November 2026

புதிதாக மூன்றுக்கு அங்கீகாரம் – பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 87 ஆக அதிகரிப்பு

மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, சிறிலங்காவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வு குழு

இணையவழி மோசடிகளை எதிர்கொள்ளவும், நாடுகடந்த குற்றக் கும்பல்களை முறியடிக்கவும் சிறிலங்கா சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.

சிவாஜிலிங்கம் உடல் தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் இன்று மதியம் தீயுடன் சங்கமமானது.

சிறிலங்கா காவல்துறைக்கு கனடிய காவல்துறையை ஒத்த சீருடை

சிறிலங்கா காவல்துறைக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடை, கனடிய காவல்துறையின் சீருடையை ஒத்திருப்பதாக  சிறிலங்கா காவல்துறையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கு உளவு பார்க்கவா இஸ்ரேலிய ட்ரோன்களை வாங்குகிறீர்கள்?

இஸ்ரேலிடமிருந்து வாங்கப்படும்  ட்ரோன்கள், அமெரிக்காவிற்காக உளவு தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படலாம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கவலை எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தமிழ் தேசியப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடாதது ஏன்?

சிறிலங்கா அதிபரின் வரவு-செலவுத் திட்ட உரையில், தமிழ் தேசியப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படாதது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், தனது 69 வயதில் நேற்றிரவு காலமானார்.

இந்திய-சிறிலங்கா  படைகளின் 12வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்தியா-சிறிலங்கா  இடையிலான 12-வது கூட்டு இராணுவப் பயிற்சியான “மித்ர சக்தி XII – 2026” மாதுரு ஓயாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.  இந்தப் பயிற்சி நவம்பர் 13 முதல் 26 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்காக கட்டுநாயக்கவில் உள்நாட்டு விமான முனையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில்,உள்நாட்டு விமான முனையம் ஒன்றை அமைப்பதற்காக 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப் போவதாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

புலம்பெயர் இலங்கையர்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கும் இரட்டைக் குடியுரிமை

இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணைவர்கள், பிள்ளைகள் மற்றும் மூன்றாம் தலைமுறை சந்ததியினருக்குக் கட்டணமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்க, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.