மேலும்

சிறிலங்கா பிரதமர் பிலிப்பைன்ஸ் பயணம்

சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸ் தலைநகர்  மணிலாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மணிலாவில் அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு,  ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வில்  சிறிலங்கா பிரதமர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்க அமைச்சர்களுடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *