அமெரிக்கா வழங்கிய 10 உலங்குவானூர்திகளும் சிறிலங்காவுக்கு புறப்பட்டன
சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா விமானப்படையின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவினால் கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 சீ ரேஞ்சர் உலங்குவானூர்திகள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற நிலக்கரி மற்றும் தடைப்பட்டுள்ள எரிபொருள் இறக்குமதியினால், சிறிலங்காவில் மின் உற்பத்தி கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நீண்டகால மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக, இன்று முன்னிலையாகியுள்ளார்.
சிறிலங்காவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அதிகாலை 5 மணிக்குப் பிறகுதான் பேரிடர் அழைப்பு வந்தது. சிக்கலில் இருந்த கப்பல், சிறிலங்காவின் மீட்பு கடமைக்குள் இருப்பதாகவும், கருதினர். தெற்கு நகரமான காலியின் கடற்கரையிலிருந்து 19 கடல் மைல்களுக்கு சற்று தொலைவில் அது இருந்தது.
பல்கலைக்கழக விரிவுரைகளை மெய்நிகர் முறையில் முன்னெடுக்குமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் விநியோகத்தில் இதுவரை எந்தப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை என்று எரிசக்தி எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில், அரச பணியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேரை திருகோணமலைக்கு இழுத்துச் செல்வதற்கு, வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.