மேலும்

இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் கோட்டா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  கோட்டாபய ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக, இன்று முன்னிலையாகியுள்ளார்.

விசாரணை ஆணைக்குழு  நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக, வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக, அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னர் வழங்கப்பட்ட நாளில் அவர் முன்னிலையாகவில்லை.

சிங்கப்பூர் செல்வதால் மற்றொரு நாள் முன்னிலையாவதாக தெரியப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து, இன்று முன்னிலையாகுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு விடுத்த அழைப்பை அடுத்து, இன்று காலை அவர் விசாரணைக்கு சமூகமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *