மேலும்

முஸ்லிம் சந்தேகநபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் விவாதித்தது என்ன?- விமல் வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்கள் இருவர் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“சந்தேக நபர்களை சந்திப்பதற்கு, எவ்பிஐ அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம் என்று வெலிசறை கடற்படை முகாமில் உள்ள அதிகாரிகள் உறுதியளித்திருந்தாலும், அந்த தடுப்பு முகாமில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி, சந்தேக நபர்களை சந்திக்க எவ்பிஐ புலனாய்வாளர்களை அனுமதித்துள்ளார்.

சந்தேகநபர்களை எவ்பிஐ அதிகாரிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரே  உத்தரவிட்டுள்ளனர்.

இரண்டு எவ்பிஐ அதிகாரிகள் ஜூலை 21ஆம் நாள் காலை 9 மணிக்கு, முகாமின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலகிலேயே சந்தேக நபர்களை சந்தித்துள்ளனர்.

அவர்களுடன் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த சஞ்சய பலிப்பான என்ற மொழிபெயர்ப்பாளரும் மற்றொருவரும், சென்றிருந்தனர். அவர்கள் இரண்டு மணிநேரம் அந்த முகாமில் இருந்துள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னால் உள்ள சந்தேக நபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் என்ன விடயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *