மேலும்

மாதம்: July 2019

கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று நடத்தப்படவிருந்த போராட்டம், சிறிலங்கா காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

அமெரிக்க அரசியலில்  செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு,  இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்

வேதாரணியம் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட படகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை

வெளிச் சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்கா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷி யுவான் எச்சரித்துள்ளார்.

ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்?

சில குறிப்பிட்ட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால், மாகாண சபைத் தேர்தல்களை ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கு முன்னர் நடத்த முடியும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரிகள்? – விசாரணைக்கு உத்தரவு

சிறிலங்கா கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்

சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு – சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உறுதி

சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு குறைந்த கட்டண விமான சேவை

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், சிறிலங்காவுக்கு விரைவில் விமானங்களை இயக்கவுள்ளது.