வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்
வேதாரணியம் பகுதியில் உள்ள தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட படகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை வேதாரணியம், மணியன் தீவில் படகு ஒன்று தரையிறங்கியது. இந்தப் படகில் மூவர் வந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
ஒருவர் மதுபோதையில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வல்வெட்டித்துறையை சேர்ந்த பார்த்தசாரதி என அழைக்கப்படும், பார்த்திபன் (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் கஞ்சா கடத்தும் நோக்கில் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.