அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும், 2019 ஜனவரி 05ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் ஜனநாயக நெறிமுறைகள் மதிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமாரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசியலில் முதல் முறையாக – இரண்டு வாரங்களில் 11ஆவது தடவையாக இன்று மாலையும் ஐந்து அமைச்சர்கள் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – அலம்பில், நித்திகைக்குளம் பகுதியில், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட ஆறு விவசாயிகளை சிறிலங்கா விமானப்படையினர், இன்று உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.
சிறிலங்கா காவல்துறை மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நொவம்பர் 5ஆம் நாளிடப்பட்டு, வெளியிட்டுள்ள அரசிதழிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அதனை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எமது வாக்குகளை கண்ணியமான முறையில் பயன்படுத்துவோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.