மேலும்

நாள்: 2nd November 2018

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி – மைத்திரியுடன் பேசினார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பான, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக  நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.

பிரதி அமைச்சர் பதவிக்காக மகிந்தவின் பக்கம் தாவினார் கூட்டமைப்பு எம்.பி வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், கட்சி தாவி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் 16ஆம் நாள் தான் கூடும் – மகிந்தானந்த

நாடாளுமன்றம் வரும் 16ஆம் நாளே கூட்டப்படும் என்று மகிந்த ராஜபக்ச ஆதரவு, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கதிர்காமர் கொலை வழக்கில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விடுதலை

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விலைகள் குறைப்பு, பொருளாதார சலுகைகள் அறிவிப்பு – மகிந்தவின் புதிய உத்தி

மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட வழிமுறை தொடர்பாக கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தோன்றியுள்ள நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பொருளாதார சலுகைகளை அறிவித்து வருகிறது.

ரணிலைச் சந்தித்தார் கோத்தா

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமாலை சந்திப்பு  இடம்பெற்றிருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.