மேலும்

நாள்: 11th November 2018

சிறிலங்கா அதிபரின் சட்டவிரோத உத்தரவுகளை புறக்கணிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அபகரித்துக் கொண்டுள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய, அவரது சட்டவிரோதமான உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் அரச பணியாளர்களிடம் கோரியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க மாலைதீவு செல்கிறார் மகிந்த?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில், சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, இந்த வாரக் கடைசியில் மாலைதீவுக்குப் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்துபட்ட கூட்டணி – புதிய சின்னத்தில் களமிறங்கும் ஐதேக

மைத்திரி- மகிந்த கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ஜனநாயக நடைமுறைகளை மதிக்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி ஐந்தாம் நாள் தேர்தலை நடத்தும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை, ஐ.நா  செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ், கவலையுடன் அறிந்து கொண்டுள்ளார் என்று அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து நாளை விக்கியின் கட்சி ஆலோசனை

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளை கூடி ஆராயவுள்ளது.

சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு 50 முன்னாள் எம்.பிக்களுடன் வெளியேறினார் மகிந்த

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி இன்று சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டார்.

குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்

கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும் கேட்க முடியும். இந்திய மாக்கடலை அண்டிய காலி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமான கதிரேசன் ஆலயமானது கொழும்பில் வாழும் தமிழ் மக்களால் வழிபடப்படும் ஒரு வணக்கத் தலமாகக் காணப்படுகிறது.

அரச ஊடகங்கள் தயாசிறி வசம் – ரம்புக்வெலவிடம் இருந்து பறிபோனது

மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சோபித தேரரின் நினைவு நிகழ்வுக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர்

2015ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை அகற்றி, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியவர் மறைந்த வண. மாதுளுவாவே சோபித தேரர். அவரது இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

பைத்தியக் காரன், கொடுங்கோலன் என்று மைத்திரியை விமர்சித்த மங்கள

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பைத்தியக் காரன் என்றும், கொடுங்கோலன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.