மேலும்

நாள்: 28th November 2018

பதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மகிந்தவிடம்  கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில்,  உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.

மகிந்தவின் நியமனத்துக்கு எதிராக தம்பர அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில், அடிப்படை உரிமை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர அமில தேரர் இன்று இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மகிந்தவின் நிதி ஒதுக்கீடுகளை வெட்டும் பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு

நாளைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா என்பது தொடர்பாக சிறிலங்காவில் ஆளும்கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

2019 முதல் காலாண்டுக்கு 1735 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – கணக்கு அறிக்கைக்கு அங்கீகாரம்

2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது – டிசெம்பர் 05 வரை விளக்கமறியல்

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் நாள் வரை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரல் ரவீந்திரவின் பாதுகாப்பு அதிகாரி

கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்காக முன்னிலையான, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஒளிப்படம் பிடிக்க ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்கப்பட்டார்.

அமைச்சரவைப் பேச்சாளர் பதவியில் இருந்து ரம்புக்வெல நீக்கம்

சிறிலங்காவின் அமைச்சரவைப் இணைப் பேச்சாளர் பதவியில் இருந்து, ஹெகலிய ரம்புக்வெல இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளார்.  அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல்  ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.

இன்று நீதிமன்றில் முன்னிலையாவாராம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான,  அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதாக கூறியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன்  சீனத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவுக்கான  சீனத் தூதுவர் சென்  ஷியுவான் நேற்று, சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.