மேலும்

நாள்: 23rd November 2018

கைதான இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் – மருத்துவ அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரை படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட தோமஸ் என்ற இந்தியர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் ஆதரவு

தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக  சபாநாயகர் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 121 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.ஆளும்கட்சியினர் வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

சிறப்பு மேல் நீதிமன்றங்களை இடைநிறுத்தி பிரச்சினையை தீர்க்கலாம் – விக்கி யோசனை

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு மேல்நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தி, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்று – தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆலோசனை கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க செனெட்டர் கடிதம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள், அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என்று அமெரிக்க செனெட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினர் கிறிஸ்  வான் ஹோலன் எச்சரித்துள்ளார்.

எந்த அரசாங்கத்திலும் கூட்டமைப்பு இணையாது – சித்தார்த்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசாங்கத்திலும் இடம்பெறாது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக வசதிகளை அதிகரிக்கும் ஒப்பந்தம் – இரு சீன நிறுவனங்களிடம் கையளிப்பு

கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்தின் வசதிகளை தரமுயர்த்துவதற்கான பணிகள், இரண்டு சீன நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில் சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடவுள்ளது.