மேலும்

நாள்: 5th November 2018

ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை தோற்கடிக்க ஜேவிபி – கூட்டமைப்பு இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜேவிபி அனுரகுமார திசநாயக்க ஆகியோருக்கிடையிலான இன்று பிற்பகல் 3 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சபாநாயகரின் அறிவிப்பால் மகிந்த தரப்பு கடும் அதிர்ச்சி – அச்சுறுத்தலில் இறங்கியது

பெரும்பான்மையை நிரூபிக்காத வரை- மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிட்ட அறிக்கை, மைத்திரி- மகிந்த அரசாங்கத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபாநாயகருக்கு அரசாங்கத்தின் பங்காளிகள், பகிரங்க எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

மகிந்தவுக்கு ‘அரியாசனம்’ கிடையாது – ஆப்பு வைத்தார் சபாநாயகர்

மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்கு, நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனத்தை வழங்க முடியாது என்றும்,  தற்போதைய ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர முடியும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

புதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி

புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார்.

வியாழேந்திரனை கூட்டமைப்பில் இருந்து நீக்குமாறு சித்தார்த்தன் பரிந்துரை

சிறிலங்கா அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி தாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை பதவியில் இருந்து நீக்குமாறு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பரிந்துரைத்துள்ளார்.

ஐதேகவுக்கும், அனைத்துலகத்துக்கும் பலம் காட்ட கொழும்பில் இன்று ஜன மகிமய

‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தவுள்ளது. பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் சந்தர்ப்பவாதம் – மங்கள சமரவீர

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்து வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இப்போது அவர்களை விடுவிக்கவுள்ளது, முற்றிலும் அரசியல் சந்தர்ப்பவாதம் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை – நாமல்

அரசியல் கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாகவும், இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் 14ஆம் நாளே கூடும்- அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டார் சிறிசேன

சிறிலங்கா நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் நாள் மீண்டும் கூட்டுவதற்கான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று இரண்டு அமைச்சர்கள் மற்றும், ஒரு இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சரை நியமித்துள்ளார்.