மேலும்

நாள்: 29th November 2018

நாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.

மைத்திரியைச் சந்திக்கிறார் சபாநாயகர் – முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜெயசூரிய தற்போது சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐதேமு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு – மைத்திரிக்கு14 எம்.பிக்கள் அவசர கடிதம்

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

மகிந்த அணியில் இருந்து வெளியேறினார் விஜேதாச – சுதந்திரமாக செயற்பட போவதாக அறிவிப்பு

அண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து, கல்வி, உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.

123 வாக்குகளுடன் நிறைவேறியது மகிந்தவின் செயலகத்துக்கான நிதி வெட்டு பிரேரணை

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான,  நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம், பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 123 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘பதவிக்கும், கடற்படைக்கும் துக்கமான நாள்’ – சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி

பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக்  கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல்  விஜேகுணரத்ன

கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன, சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகிந்தவுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணை மீது விவாதம் ஆரம்பம்

மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா  பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும்  பிரேரணை இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,  விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது மகிந்த தரப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30  மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு வேட்டு வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.