மேலும்

மாதம்: December 2018

சிறிலங்கா கடற்படைக்கு புதிய தளபதி

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து ஆளுனர்களையும் பதவி விலக உத்தரவு

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்  மீது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

அரசியலமைப்பு திருத்த முயற்சிகளை தோற்கடிப்போம் – மகிந்த அமரவீர

வடக்கு- கிழக்கு இணைப்பு போன்ற, சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை தமது கட்சி தோற்கடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நாளை தொடக்கம் ஸ்மார்ட் அடையாள அட்டை

சிறிலங்காவின் ஆட்பதிவுத் திணைக்களம் நாளை தொடக்கம், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நோக்கி நாளை இரண்டு நிவாரண உதவி தொடருந்துகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சிக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன், தொடருந்து ஒன்று, கொழும்பு, கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மீண்டும் திறக்கப்படுகிறது சுதந்திரக் கட்சி தலைமையகம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவை அடுத்து, மூடப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம், நாளை மீண்டும் திறக்கப்படும் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் விவசாய காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வரும், 1,099 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஒன்றேகால் இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 123, 862 பேராக அதிகரித்திருப்பதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

உட்கட்சிப் பூசல் – சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூட மைத்திரி உத்தரவு

வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் நாடு திரும்பும் வரை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார்.