மேலும்

நாள்: 21st November 2018

ஐதேமுவின் அடுத்த ‘செக்’  மகிந்தவின் அமைச்சர்களுக்கு

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளுக்கான ஊதியம், மற்றும் பிற சலுகைகள், வசதிகளை இடைநிறுத்துவது தொடர்பான பிரேரணை ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி இன்று சமர்ப்பித்துள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை உறுதி செய்தது நாடாளுமன்ற பதிவேடு

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 14ஆம் நாளும், 16ஆம் நாளும், நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்யும் நாடாளுமன்றப் பதிவேடு (ஹன்சார்ட்) அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் வசந்த சேனநாயக்க – அங்குமிங்கும் தாவுகிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சத்தியாக்கிரகத்தில் குதிக்கிறார் தம்பர அமில தேரர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியலமைப்புக்கு எதிரான, அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வண.தம்பர அமில தேரர்  சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

அரசியல் குழப்பதாரிகளுக்கு பயணத் தடை, சொத்துக்கள் முடக்கம் – வெளிநாடுகள் திட்டம்?

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி தொடருமானால், இதற்குக் காரணமான அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது பயணத்தடை, மற்றும் சொத்துக்கள் மீதான தடைகளை விதிக்கும் முடிவுகளை எடுக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆபத்தில் சிறுபான்மையினர் – வெளிநாட்டு தூதுவர்களிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நிசாந்த சில்வா இடமாற்ற விடயத்தில் தலையிடவில்லை- காவல்துறை ஆணையம்

குற்றப் புலனாய்வுப் பிரிவின், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் விசாரணை அலகின் பொறுப்பதிகாரியான, நிசாந்த சில்வாவின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு, தாங்கள் உத்தரவிடவில்லை என்று சிறிலங்காவின் தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.