மேலும்

நாள்: 12th November 2018

சிறிலங்கா அரசின் அழைப்பை நிராகரித்த மேற்குலக தூதுவர்கள்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக மனுக்கள் – விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம், நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

மாலைதீவு செல்கிறார் மகிந்த – சந்திப்பாரா மோடி?

மாலைதீவில் அதிபர் இப்ராகிம் சோலி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு நிகழ்வில், சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதியாக, சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் – சமந்தா பவர்

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரும் உச்சநீதிமன்றில் மனு தாக்கல்

சிறிலங்கா நாடாளுமன்றத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக,  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான, பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அடிப்படை உரிமை மீறல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக 12 மனுக்கள் – உச்சநீதிமன்றம் ஆராயத் தொடங்கியது

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா

2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர், துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீளக்கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்காக மெழுகுவர்த்தி போராட்டம்

சிறிலங்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும்- நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கொழும்பில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார் தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டின் விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வணக்கம் செலுத்தினார்.

வெறித்துப் போகும் சுதந்திரக் கட்சி கூடாரம் – தொடர்ந்து பாயும் முன்னாள் எம்.பிக்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மேலும் பலர், நேற்று மாலையும்  சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர்.