மேலும்

நாள்: 8th November 2018

சீனா, இந்தியாவுடனான உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் – நாமல்

சீனா, இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்து பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா ருடேக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா விவகாரத்தில் அமெரிக்கா, பிரித்தானியா தலையீடு – வாசுதேவ குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவும் பிரித்தானியாவும், தலையீடு செய்வதாக,  சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

சிறிலங்காவில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் இல்லாதவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?

அமைச்சரவையில் இடம்பெறாத ஒருவர் எப்படி அமைச்சரவைப் பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர்.

அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட்

பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் தேசமான்ய விருதை திருப்பி அனுப்புகிறார் தேவநேசன் நேசையா

ஜனநாயக கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் முரணாகச் செயற்பட்டு வரும், சிறிலங்கா அதிபரிடம் இருந்து பெற்ற, தேசமான்ய விருதை, திருப்பி அனுப்புவதாக, ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியான கலாநிதி தேவநேசன் நேசையா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 14 ஆம் நாள் வாக்கெடுப்பு – சபாநாயகர் உறுதி

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 14ம் நாள் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்பு – உண்மையில்லையாம்

நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகிறது அமெரிக்கா

அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.