மேலும்

நாள்: 10th November 2018

நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னால் இருந்த புலனாய்வு அறிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளின் சங்கமம்

இன்று காலை தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்த ஐதேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாடியதுடன், ஜனநாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன

அரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக பின்தொடர்கிறோம் – அமெரிக்க உயர் அதிகாரி

நிச்சயமாக சிறிலங்காவின் நிலைமைகளை நாங்கள் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வருகிறோம் என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து  பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – என்ன சொல்கிறார்கள் இவர்கள்…?

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த நடவடிக்கைக்கு- அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் – மங்கள சமரவீர

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நிச்சயமாக நாங்கள் உச்சநீதிமன்றத்துக்குச் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றில் கருத்தை அறியாமல் தேர்தலை நடத்த முடியாது – மகிந்த தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின்  கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தை நாடும் ஐதேக – அலரி மாளிகையில் குவிந்த ஆதரவாளர்கள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள முடிவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.