மேலும்

நாள்: 3rd November 2018

மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்

சிறிலங்காவில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாரங்கள் என்பது நீளமானது, நவம்பர் 16 இல்  நாடாளுமன்றத்தை மீளக்கூட்டும் போது நிறைய மாற்றங்கள் இடம்பெற்றுவிடும்.  அது இரத்தக்களரியை ஏற்படுத்தி விடும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய எச்சரித்திருந்தார்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அட்மிரல் விஜேகுணரத்ன விவகாரம் – நீதிமன்ற உத்தரவினால் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கடி

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் போரையே மகிந்த முன்னெடுத்தார் – நாமல் ராஜபக்ச

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் திட்டமிட்டு வந்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை நிறுத்துவோம் – சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

சிறிலங்கா தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கினால், ஜிஎஸ்பி  பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம், சிந்திக்க வேண்டி நிலை ஏற்படும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய  ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே எச்சரித்துள்ளார்.

‘அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே?’ – சமந்தா பவர்

மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் சிறிலங்காவில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியை பெறுவது சிறந்த மூலோபாய முடிவு – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவை புறக்கணித்து விட்டு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை பேணமாட்டோம் என்று, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள, சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.