மேலும்

மாதம்: October 2018

இந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மாலைதீவு, நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட சிறிய தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்தும் போரிடுகின்றன.

அலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

ரணிலுடன் ‘பொருந்தா திருமணம்’ – ஒரு ஆண்டிலேயே தெரிந்து விட்டதாம்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான மகிழ்ச்சியற்ற பொருந்தாத திருமணம் முடிவுக்கு வந்து விட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு பணியகத்துக்கு சீல் – மைத்திரியின் அதிகாரிகள் அதிரடி

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசியல் குழப்பங்களில் சீனா தலையிடாதாம்

சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

மீண்டும் பாதுகாப்புச் செயலராக கோத்தா?

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளில், ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை காலை அமைச்சரவையைக் கூட்டுகிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் மைத்திரி – அமைச்சவை திங்களன்று பதவியேற்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.