மேலும்

நாள்: 8th October 2018

சிறிலங்கா, இந்திய கடற்படைகளுடன் ஜப்பானிய கடற்படை கூட்டுப் பயிற்சி

சீனாவின் கடல்சார் செயற்பாடுகள் அதிகரித்துள்ள இந்தியப் பெருங்கடலில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளுடன், ஜப்பானிய கடற்படையினர், கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதாக, ஜப்பானின் என்எச்கே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவில் நிலக்கடலை அறுவடை வலயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, கணேசபுரம் பகுதிகளை உள்ளடக்கியதாக 200 ஏக்கர் பரப்பளவிலான, நிலக்கடலை அறுவடை வலயத்தை, சிறிலங்கா விவசாய அமைச்சு உருவாக்கியுள்ளது.

சிறிலங்கா போர்க்கப்பல்கள் இந்தியாவுக்குப் பயணம்

சிறிலங்கா கடற்படையின் இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் இருந்து நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.

விஜயகலா மகேஸ்வரன் கைதாகி பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பொறுப்புக்கூறல், நிலைமாறுகால நீதியை வலியுறுத்துவார் அமெரிக்க உயர் அதிகாரி

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையார், நாளை மாலைதீவு மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல்

அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாலக டி சில்வாவை தப்பியோட விடாமல் தடுக்க முயற்சி

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

சிறிலங்காவுக்கு அதிகபட்ச உதவி – ரணிலிடம் நோர்வே பிரதமர் உறுதி

சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது.

வெள்ள அபாயத்தில் சிறிலங்கா நாடாளுமன்றம் – அதிகாலையில் அவசரமாக அழைக்கப்பட்ட இராணுவம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள தியவன்ன ஓயாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தைச் சுற்றி மண்மூடைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.