மேலும்

நாள்: 7th October 2018

சமல் ராஜபக்சவை முன்மொழிகிறார் சம்பந்தன்?

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரளவும், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும் நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா போர்த் தளபாடங்களை சிறிலங்கா வாங்குவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை

ரஷ்யாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான பாதுகாப்புத் தளபாடங்களை கொள்வனவு செய்யும் சிறிலங்காவின் முயற்சிக்கு, பாரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு ஆலோசகரை நாடு திரும்ப உத்தரவு

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக அண்மையில் பொறுப்பேற்ற, கலாநிதி தயான் ஜயத்திலகவின் முறைப்பாட்டை அடுத்து, மொஸ்கோவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய குறூப் கப்டன் சன்ன திசநாயக்க கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

செவ்வாயன்று நாடாளுமன்றம் வரும் இரண்டு முக்கிய சட்டவரைவுகள்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட வரைவு என்பன வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மகிந்த – மைத்திரி மீண்டும் இரண்டு வாரங்களில் சந்திப்பு – மேற்பார்வை அரசை அமைக்க யோசனை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், மீண்டும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் விரைவில் சீனாவின் இராணுவத் தளம் – அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

கடன் இராஜதந்திரத்தை  தனது பூகோள செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்வதற்கு சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்றும், அம்பாந்தோட்டை துறைமுகம், பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக  விரைவில் மாற்றமடையும் என்றும் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.