நாளை காலை அமைச்சரவையைக் கூட்டுகிறார் ரணில்
சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாளை அலரி மாளிகையில் போட்டி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா அதிபரால் நேற்றுப் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகி்ந்த ராஜபக்சவை, சீன தூதுவர் சென் ஷியுவான் இன்று மாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை அமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று ஜேவிபி முடிவு செய்துள்ளது. ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்புகளும், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி காலக்கெடு விதித்துள்ளது.
சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தை மூன்று வாரங்களுக்கு முடக்கும் உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த தகவலை சபாநாயகர் செயலகம் அறிவித்துள்ளது.