மேலும்

மாதம்: November 2018

சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முக்கிய ஆலோசனையில் மகிந்த – வெளியேற்ற முடியாதென சூளுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுக்கு மைத்திரி வாக்குறுதி கொடுக்கவில்லையாம்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சித் தலைவர்களுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- அடம்பிடிக்கும் மைத்திரி

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம்மிடம் தெரிவித்தார் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை மீண்டும் நிராகரித்தார் மைத்திரி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது தடவையாகவும், நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை ஒருபோதும் ஒத்திவைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த அணி எம்.பிக்களின் தாக்குதலில் காவல்துறையினர் காயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, மகிந்த ராஜபக்ச அணியினரின் தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் பலரும் காயமடைந்தனர்.

காமினி ஜெயவிக்ரம பெரேரா, விஜித ஹேரத் மீது மிளகாய்த் தூள் வீச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பங்களின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள், மிளகாய்த் தூளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை – என்ன நடந்தது?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது தடவையாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.பெரும் கூச்சல் குழப்பங்கள், மோதல்களுக்கு மத்தியில் நடந்தேறிய நாடாளுமன்ற அமர்வு பற்றிய நேரலைப் பதிவுகளின் தொகுப்பு.