மேலும்

நாள்: 21st October 2018

கோத்தாவுக்கு அஞ்சும் மகிந்த; செல்வாக்கு இல்லாத பசில்- போட்டு உடைக்கிறார் கோமின் தயாசிறி

கோத்தாவை அடுத்த அதிபர் தேர்தலில் நிறுத்தினால், அவர் இரண்டாவது பதவிக்காலத்தையும் பெற்றுக்கொள்வார் என்று மகிந்த ராஜபக்ச அஞ்சுகிறார் என, சிறிலங்காவின் பிரபல சட்ட நிபுணரான கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைத் தொடங்கினார் அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடக்கு மாகாண முதலமைச்சரும் ஏட்டிக்குப் போட்டியான, விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆய்வுக்கான பட்டியலில் லெப்.கேணல் பெயர் இருக்கவில்லை – தீபிகா உடகம

மாலிக்கு அனுப்பப்பட்ட சிறிலங்கா படையினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் உத்தரவை அடுத்து லெப்.கேணல் அமுனுபுரவை திருப்பி அழைக்கிறது சிறிலங்கா

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணியின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் கலன அமுனுபுரவை, உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பலாலி மற்றும், மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கும், உதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

மூடிய அறைக்குள் ரணிலுடன் தனியாகப் பேசிய மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா மீது அதிருப்தியை வெளிப்படுத்திய மோடி – மன்னிப்புக் கோரினார் ரணில்

இரண்டு நாடுகளும் இணங்கிக் கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை, சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.