மேலும்

நாள்: 18th October 2018

கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – சிறிலங்கா திட்டவட்டம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி பயணமானார் ரணில் – சதித் திட்டம் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று மாலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.  இந்தப் பயணத்தின் போது, அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை மறுநாள் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிறிலங்கா விமானப்படைக்கு ஆறு புத்தம் புதிய சீன விமானங்கள்

சீனாவில் தயாரிக்கப்பட்டு, சிறிலங்காவில் பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆறு புத்தம் புதிய பி.ரி-6 பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்தியாவுக்கு கைமாறியது

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கிடைத்த 1 பில்லியன் டொலர்

சீனாவிடம் இருந்து நேற்று சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  சிறிலங்கா நாணயத்தை வலுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கவும் இந்த நிதியுதவி பயன்படும் என்று கூறப்படுகிறது.

அரசியல் கைதிகள் விடுதலை – அடுத்தவாரம் முடிவெடுப்போம் என அனுப்பி வைத்தார் சிறிலங்கா அதிபர்

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்து அனுப்பியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

கைதான இந்தியர் ‘றோ’ உளவாளியே – விபரங்களை வெளியிட்டார் விமல் வீரவன்ச

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர்  மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இந்தியர், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ வின் ஒரு உறுப்பினர் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோடியுடன் தொலைபேசியில் பேச்சு – விளக்கமளித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் இந்தியப் புலனாய்வு அமைப்பான றோ தொடர்புபட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து- நேற்றுமாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டு, பேசியுள்ளார்.

‘றோ’ வின் ஈடுபாடு குறித்து எதுவும் கூறவில்லை – சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு

சிறிலங்கா அதிபரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதி முயற்சியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் எந்தவொரு ஈடுபாடு தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.