மேலும்

நாள்: 31st October 2018

இந்திய நாளிதழ்களின் பார்வையில் சிறிலங்காவின் அரசியல் குழப்பம்

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்கள் இந்தியாவில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தியாவின் பிரதான ஆங்கில நாளிதழ்கள் பலவும், இந்த விவகாரம் குறித்து ஆசிரியர் தலையங்கங்களை வரைந்துள்ளன. முக்கிய இந்திய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பு இது.

கொந்தளிப்புக்கு மத்தியில் கொழும்பு வந்தார் அமெரிக்காவின் புதிய தூதுவர்

சிறிலங்காவின் அரசியல் சூழல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள சூழ்நிலையில், சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.

சீனாவிடம் இறைமையை இழந்து விட்டது சிறிலங்கா – அமெரிக்க பாதுகாப்புச் செயலர்

சீனாவுடனான உடன்பாட்டின் விளைவாக, சிறிலங்கா தனது சொந்த துறைமுகத்தின் இறைமையை இழந்து விட்டது என, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா, மேற்குலக அழுத்தங்களால் அடுத்தவாரம் நாடாளுமன்றைக் கூட்ட ஆலோசனை

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான முயற்சிகளில், ஐ.நா மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.

வெளிநாடுகள் கோருவதன்படி நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது – கோத்தா

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டம்?

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என்று, சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியல் குழப்பம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கவலை

சிறிலங்காவில் முன்னாள் அதிபர், பிரதமராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அங்குள்ள நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஜெரிமி ஹன்ட் தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

ரஷ்யாவுக்கு தூது விட்ட மகிந்த

சிறிலங்காவில் புதிதாகப் பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு கிடைக்காத நிலையில், ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனப் பயணத்தை பிற்போட்டார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.