மேலும்

நாள்: 20th October 2018

சுஸ்மா, ராஜ்நாத் சிங், டோவலுடன் ரணில் தனித்தனியாகப் பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோருடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தினார். 

மோடி – ரணில் பேச்சுக்களில் முக்கிய விடயங்கள் ஆராய்வு

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஹைதராபாத் ஹவுசில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தியத் தலைவர்களுடன் ரணில் இன்று முக்கிய பேச்சு – தமிழர் விவகாரமும் ஆராயப்படும்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்திய அரசின் தலைவர்களுடன் தனித்தனியாக   – முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளார்.

அடுத்தவாரம் அட்மிரல் விஜேகுணரத்னவை நீதிமன்றில் நிறுத்துவோம் – சிஐடி உறுதி

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை அடுத்தவாரம் கைது செய்யவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியது உண்மையே – என்.ராம்

தம்மைக் கொலை செய்ய ‘றோ’ சதித் திட்டம் தீட்டியதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூறியதாக தாம் வெளியிட்ட செய்தி உண்மையானதே என்று ‘தி ஹிந்து’ நாளிதழின், ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரி மீதான போர்க்குற்றச்சாட்டு – மௌனம் காக்கும் சிறிலங்கா அரசாங்கம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரியை திருப்பி அனுப்ப ஐ.நா எடுத்துள்ள முடிவு குறித்து சிறிலங்கா அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.

போர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட சிறிலங்கா தளபதியை திருப்பி அனுப்புகிறது ஐ.நா

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படைப்பிரின் கட்டளை அதிகாரி ஒரு போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.