மேலும்

நாள்: 4th October 2018

மகசின் சிறையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இன்று

சிறிலங்கா அதிபரின் விமர்சனங்களை அடுத்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் இன்று நடத்தவுள்ளனர்.

பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்கத் தயார் – மகிந்த அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரியாவிடை கொடுக்கப்பட்ட மேஜர் ஜெனரலுக்கு கடைசி நேரத்தில் சேவை நீடிப்பு

சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், திடீரென அவருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.