மேலும்

மாதம்: October 2018

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் – கனடா

சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா  மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும்,  சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இன்று முதல் இரண்டு பிரதமர் செயலகங்கள் – மகிந்தவும் பொறுப்பேற்கிறார்

சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நிலவரம் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கரிசனை

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

எந்தப் பதவியும் வேண்டாம்- கோத்தா நிராகரிப்பு

மைத்திரிபால சிறிசேன- மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் தாம் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நேற்றிரவு நீக்கம் – அலரி மாளிகையில் பதற்றம் அதிகரிப்பு

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழுத்தம்

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனையுடன் கவனித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபருக்கும், சபாநாயகருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.

சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- சிறிலங்கா அதிபர் விளக்கம்

ரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன ரணதுங்கவை தாக்க முயற்சி – பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் மூவர் காயம்

கொழும்பு- தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.