மேலும்

நாள்: 13th October 2018

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்

சுமார் ஒரு மாதமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக கைவிட்டனர்.

ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன்

1977ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து புதனன்று முடிவு – சம்பந்தனுக்கு மைத்திரி உறுதி

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்கமான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்திக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவியைக் கோரும் சிறிலங்கா

சிறிலங்காவின் துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சீனாவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

வலுவான கடவுச்சீட்டு தரவரிசை – எதியோப்பியா, வடகொரியாவுடன் இணைந்த சிறிலங்கா

எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி.

அரசியல் கைதிகள் விடுதலையை வரவுசெலவுத் திட்டத்துக்கான ஆயுதமாக்குங்கள் – முதல்வர்

எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, அரசியல் கைதிகளின் விடுதலையை சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒரு நிபந்தனையாக முன்வைக்க வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய 50,000 ரூபா போலி நாணயத் தாள்கள்

சிறிலங்காவில், 50,000 ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சிறிலங்கா காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்றார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் 46 ஆவது தலைமை நீதியரசராக, நளின் பெரேரா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.