மேலும்

நாள்: 14th October 2018

அம்பாந்தோட்டையில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்களுக்கு தனியான இறங்குதுறை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான, தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் பிரதான கடற்படைத் தளத்தை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு, உயர்தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு பொறிமுறைகள் நிறுவப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் வெளிநாடு சென்ற சிறிலங்கா அதிபர், பிரதமர் – 20 மில்லியன் மக்களின் நிலை

சிறிலங்கா அதிபரும், பிரதமரும், ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்ததால், கடந்தவாரம் ஒரு நாள் முழுவதும், சிறிலங்காவில் 20 மில்லியன் மக்களுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்த மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி

உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது.

புதிய காவல்துறை மா அதிபராக எஸ்.எம்.விக்ரமசிங்க? – விலகுகிறார் பூஜித

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அடுத்தவாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் 1200 வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது இந்தியா

அம்பாந்தோட்டையில் இந்தியாவின் உதவியுடன் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான புரிந்துணர்வு உடன்பாடு நேற்று அம்பாந்தோட்டையில்  கையெழுத்திடப்பட்டது.

ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.