மேலும்

நாள்: 19th October 2018

ராகுல், சோனியா, மன்மோகன் சிங்குடன் சிறிலங்கா பிரதமர் பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் நிமலராஜனின் 18 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின், 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

மன்னார் புதைகுழி எலும்புக்கூடு மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள 185 எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு கூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு, மன்னார் நீதிமன்ற நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

வடக்கில் 5 ஆண்டுகளில் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரிப்பு

வடக்கு மாகாணத்தில், 2011ஆம் ஆண்டுக்கும், 2015ஆம் ஆண்டுக்கும் இடையில், 78 ஆயிரம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில், வடக்கின் வேலைப்படை 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்றும், உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊடகச் செய்திகள் பொய் – இந்திய வெளிவிவகார அமைச்சு

தம்மைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபன் நினைவேந்தலை ஒழுங்கமைத்தவர் விசாரணைக்கு அழைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.